முதல்வர் விஜய்யுடன் தொழில் வர்த்தக கூட்டமைப்பினர் சந்திப்பு
18 May 2026, 10:38 pm

முதல்வர் விஜய்யுடன் தொழில் வர்த்தக கூட்டமைப்பினர் சந்திப்பு

சென்னை, மே 18 - தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யை, இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைச் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) பிரதிநிதிகள் குழுவினர் திங்களன்று (மே 18) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பில் தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்க த்திற்கு இணங்க மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் முத லீட்டை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

அப்போது, தொழில்துறை வளர்ச்சியில் ‘பிக்கி’ (FICCI) வழங்கி வரும் பங்களிப்பை முதல்வர் பாராட்டினார்.

‘பிக்கி’ (FICCI) தெரிவித்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளுக்கு தீர்வு காண ஆவன செய்யப்படும் என்றும், நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை உருவாக்கும் பயணத்தில் ‘பிக்கி’ (FICCI) தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சந்திப்பில் ‘பிக்கி’ (FICCI) தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் சேர்மன் ஜி.எஸ்.கே. வேலு, இணைத்தலைவர்கள் பூபேஷ் நாகராஜன், டாக்டர் அசோக் வர்கீஸ், மாநில கவுன்சில் தலைவர் ஆர். சுதர்சன் மற்றும் ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினரும் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் வணிகச் செயல்முறைகளை மேலும் எளிமைப்படுத்துவது, அதன்மூலம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

அரசு மற்றும் தொழிலகங்கள் இடையே, பயனுள்ள இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு வரும் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு அமைப்பின் முக்கியப் பங்கினை முதலமைச்சர் விஜய் பாராட்டினார்.

மேலும், சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரை களைக் கவனமாகக் கேட்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க, சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு தொடர்ந்து தனது ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கிடுமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில், சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழு தலைவர் மற்றும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறு வனத்தின் ஆலோசகர் ராம்குமார் சங்கர், துணைத் தலைவர் மற்றும் டெல்பி டிவிஎஸ் தலைவர் ஏ. விஸ்வநாதன் மற்றும் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு பொதுச்செயலாளர் கே. சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.