முதல்வர் விஜய்-யை சந்தித்த விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர்கள்
5 Jun 2026, 12:30 am
<p><strong>முதல்வர் விஜய்-யை சந்தித்த விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர்கள்</strong></p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை, செவ்வாயன்று (ஜூன் 2) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், பொருளாளர் கே.பி. பெருமாள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி. டில்லிபாபு, செயலாளர் பி. பெருமாள், மத்தியக்குழு உறுப்பினர் எஸ். அனு ஆகியோர் சந்தித்து பேசினர்.</p><p>தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர். சக்ரவர்த்தி, நிர்வாகிகள் பாரதி அண்ணா, பகத்சிங், ரமேஷ்பாபு, தமிழ்ச்செல்வி ஆகியோரும் முதல்வரை சந்தித்து மனு அளித்தனர். (விபரம் - 4)</p>
