முதல்வர் விஜய் ஆய்வு எதிரொலி எம்.சி.ராஜா விடுதியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை
18 Jul 2026, 11:56 pm
<p><strong>முதல்வர் விஜய் ஆய்வு எதிரொலி எம்.சி.ராஜா விடுதியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை</strong></p><p>சென்னை, ஜூலை 18 மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாண வர்கள் தெரிவித்த குறைகளை தீர்க்கும் வகையில், சமூகநீதித் துறை உடனடி நட வடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. எம்.சி.ராஜா மாணவர் விடுதிக்கு கூடுத லாக பல தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டிருந்தாலும், குடிநீர் வசதி, உண வின் தரம், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறை பாடுகள் இருப்பதாக மாணவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பிரிவுக்கும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார் தெரிவித்து வந்தனர். அப்போது, விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும், போதுமான குடிநீர் வசதி இல்லை என்றும், கண்காணிப்பு கேமராக்கள் குறை வாக உள்ளதாகவும் மாணவர்கள் தெரி வித்தனர். மேலும், விடுதி காப்பாளர்கள் மாணவர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும் வேதனையுடன் கூறினர். அதேபோல், உடற்கல்வி ஆசிரியரை நிய மிக்க வேண்டும், நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும், உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதலமைச்சரிடம் மாணவர்கள் வழங்கினர். ஆய்வின்போது முதலமைச்சர் விஜய், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் சமையலறை, உணவகம், குடிநீர் வசதி, கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதி களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படை யில் சமூகநீதித் துறை உடனடி நடவடிக்கை களை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூகநீதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாண வர்களுக்கு தரமான உணவு வழங்கும் வகையில் விடுதியின் உணவுப் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரண மாக நிறுத்தப்பட்டிருந்த இட்லி, சப்பாத்தி மீண்டும் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. மாணவர்களுக்கு தர மான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. அத்துடன், இதுவரை மூடப்பட்டிருந்த வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன் படுத்த திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரி வித்தார்.</p>
