முந்தய பக்கம்

மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்!

14 May 2026, 9:29 pm
மே மாத மகளிர் உரிமைத் தொகை  விரைவில் வரவு வைக்கப்படும்!
<p><strong>மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்!</strong></p><p>முதலமைச்சர் விஜய் அறிவிப்பு சென்னை, மே 14 - மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும், அதேநேரம் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப் பட உள்ளதாகவும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், கடந்த 2023 செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் துவங்கப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் இந்த திட்டம், பெண் களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சுமார் 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வந்தனர். இதனிடையே, தாங்கள் ஆட்சி க்கு வந்தால், மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்து வோம் என்று தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்தார். அதற்கேற்ப தற்போது தவெக வெற்றிபெற்று விஜய் முதலமைச்சரான நிலை யில், உரிமைத் தொகை ரூ. 2,500 கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் தான், முதல மைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், 2026 மே மாதத்திற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப் படும்” என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram