தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதல்வர் ஜோசப் விஜய் இன்று மதுரை வருகை ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்; காந்தி அருங்காட்சியகம் திறப்பு

28 Sept 2026, 12:03 am
முதல்வர் ஜோசப் விஜய் இன்று மதுரை வருகை ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்; காந்தி அருங்காட்சியகம் திறப்பு

முதல்வர் ஜோசப் விஜய் இன்று மதுரை வருகை ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்; காந்தி அருங்காட்சியகம் திறப்பு

மதுரை, செப்.27-தமிழக முதல்வர் ஜோசப் விஜய் செப்.28-ஆம் தேதி மதுரை வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதையொட்டி மாநகரம்முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை தீவிரப் படுத்தியுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட் டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்தின் தொடக்க விழா முதலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல்வர் வருகையை முன் னிட்டு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் சுத்தம் செய்தல், கட்ட

டப் பகுதிகளில் சீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல், நடைபாதைகளில் பேவர் பிளாக் அமைத்தல், மின்விளக்குகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. தாய்–சேய் நலப் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள் ளிட்ட பகுதிகளிலும் முன்னேற்பாட் டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. மருத்துவமனைக்கு அருகிலுள்ளபகுதிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா?முதல்வர் வருகையை முன் னிட்டு மருத்துவமனையில் துரிதமாக நடைபெறும் சீரமைப்புப் பணிகளுக்கு இடையே, நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.குறிப்பாக, எலி தொல்லை, பழைய கட்டடப்பகுதிகளின் பாதிப்புகள், சாலை மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அடிப்படை வசதிகள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண் டியஅவசியமும் உள்ளது.

தென் மாவட்டங்களின் பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காகச் சார்ந்திருக்கும் முக்கிய அரசு மருத்துவமனையாக ராஜாஜி மருத்துவமனை விளங்குவதால், முதல்வரின் வருகையை முன்னிட்டு மேற் கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகள் விழாவுடன் முடிவடையாமல், நீண்டகால அடிப்படை பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப் படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.காந்தி நினைவு அருங்காட்சியகம் திறப்புராஜாஜி மருத்துவமனை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, நவீன டிஜிட்டல், ஒளி–ஒலி மற்றும் தொடுதிரை வசதிகளுடன் அருங் காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.முதல்வரின் வருகையை முன் னிட்டு ராஜாஜி மருத்துவமனை, காந்தி நினைவு அருங்காட்சியகம், விமானநிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.