தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என்எல்சி பங்கு விற்பனையை மறுபரிசீலனை செய்க! பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

25 Jun 2026, 8:55 pm
என்எல்சி பங்கு விற்பனையை மறுபரிசீலனை செய்க! பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

என்எல்சி பங்கு விற்பனையை மறுபரிசீலனை செய்க! பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

சென்னை, ஜூன் 25 - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி. இந்தியா) இந்திய அரசின் பங்கு களை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரி சீலனை செய்யக் கோரி தமிழ்நாடு முத லமைச்சர் ச. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 2 சதவிகிதம் அடிப்படை பங்குகள் மற்றும் 1 சதவிகிதம் கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் உள்ளிட்ட 3 சதவிகிதம் வரையி லான விற்பனைக்கான சலுகை மூலம் பங்கு களை விற்பனை செய்ய இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தை அவர் கடிதத்தில் தெரிவித்துள் ளார்.

என்.எல்.சி. இந்தியா’ நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை யகம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ளதென்றும், சுரங்கம்-I, சுரங்கம்-IA, சுரங்கம்-II உள்ளிட்ட முதன்மையான பழுப்பு நிலக்கரி சுரங்கச் செயல்பாடுகளும் முக்கிய அனல் மின் நிலை யங்களும் இங்கேயே அமைந்துள்ளன என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநில அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப் போடும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங் களாகக் கட்டமைக்கப்பட்ட இந்நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.எல்.சி. இந்தியா நிறு வனம் வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் மட்டுமல்ல; எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேசியச் சொத்து என்றும், இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது இதுபோன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கை செய்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களை கடந்து மாநிலத்தின் நீண்டகால நலன்களையும் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும் பாதிப்பதாக அமையும் என்பதால், தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான ஆட்சேபனைகளை இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என நம்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார்.

தேர்தல் பிரச்சாரத்திலும் அதற்கு முன்பும் ஒன்றிய அரசு என்று கூறிவந்த முதலமைச்சர் விஜய், இந்த கடிதத்தில் முதல்முறையாக ‘இந்திய அரசு’ என்று பயன்படுத்தி இருக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.