மேகதாது அணை விவகாரம் பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
26 May 2026, 9:17 pm

மேகதாது அணை விவகாரம் பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை, மே 26 - காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பூமி பூஜை நடத்த அறிவித்திருப்பது உச்ச நீதி மன்றத் தீர்ப்பையும் காவிரி நடுவர் மன்றத் தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று கூறி, அதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல மைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி படுகை நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை என்பதால், கிடைக்கக்கூடிய நீர் ஏற்கனவே மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும், மேகதாது திட்டம் காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவர் கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான ஆய்வு வரையறைகளை ஒன்றிய அமைச்ச கம் இதுவரை வழங்காத நிலையில், கர்நாட காவின் முன்மொழிவை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் பரிசீலிப்பது வியப்பாக இருக் கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்கவும், காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்த புதிய திட்டமும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தவும் பிரதமரி டம் அவர் கோரியுள்ளார்.