உணவு பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்க! பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
7 Jul 2026, 9:55 pm
<p><strong>உணவு பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்க! பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!</strong></p><p>சென்னை, ஜூலை 7: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013இல் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு கடந்த ஜூன் 24 அன்று வெளியிட்ட சட்ட வரைவு, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள் உரிமைகளைப் பறிப்ப தாக அமைந்துள்ளது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நடை முறையில் குடும்ப உறுப்பினர் எண்ணிக் கையைப் பொருட்படுத்தாமல் மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், புதிய திருத்தத்தின்படி நபர் ஒருவ ருக்கு 7 கிலோ என்ற அடிப்படையில், குடும்பத்திற்கு அதிகபட்சம் 35 கிலோ என உச்சவரம்பு விதிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பி னர் எண்ணிக்கை 3.54 மட்டுமே என்பதால், இத் திருத்தம் அமலானால் ஏஏஒய் குடும்பங்களுக் கான மாதாந்திர ஒதுக்கீடு 65,261 மெட்ரிக் டன்னிலிருந்து 42,040 மெட்ரிக் டன்னாகக் குறையும். இது மாநிலத்தின் விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட சுமார் 70 லட்சம் ஏழை மக்களின் வாழ்க்கை யைப் பாதிக்கும். மேலும், குடும்பக் கட்டுப் பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பது போல் இது அமையும் என்றும், எனவே தற்போ தைய நடைமுறையையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி யுள்ளார்.</p>
