பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
15 May 2026, 10:15 pm

பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

சென்னை, மே 15 - தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையை பாதுகாக்கும் நோக்கில், பருத்திக்கான தற்போதைய 11 சதவிகித இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மாநில மாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாகவும், இந்தத் துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக ஊரக மற்றும் பகுதி நகர்ப்புற பெண்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை பெற்று வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், அண்மைக் காலமாக பருத்தி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் தாக்கமாக நூல் விலையும் உயர்ந்து ஜவுளித் துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்திருப்பதும், வர்த்தக நடவடிக்கை கள் அதிகரித்திருப்பதும் இந்த விலை உயர்விற் கான முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் பருத்தி விலை, கண்டி ஒன்றுக்கு ரூ. 54 ஆயிரத்து 700-இலிருந்து ரூ. 67 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.

இது சுமார் 25 சதவிகித உயர்வாகும்.

அதேபோல் நூல் விலை யும் கிலோவுக்கு ரூ. 301 இலிருந்து ரூ. 330 ஆக அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடி தத்தில் எடுத்துரைத்துள்ளார்.

இந்தச் சூழலில், தொழிற்துறைக்கு தேவை யான மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநி யோகத்தை உறுதி செய்ய இறக்குமதி மட்டுமே நடைமுறை தீர்வாக இருப்பதாகவும், ஆனால் பருத்தி இறக்குமதிக்கு தற்போது 11 சதவிகித வரி விதிக்கப்படுவது தொழிற்துறைக்கு கூடுதல் சுமை யாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டால், அதிகரித்து வரும் ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவேற்றுவதற்கும், உலகளாவிய போட்டிச் சந்தையில் தமிழ்நாட்டின் ஜவுளித் துறையை நிலைநிறுத்துவதற்கும் பெரிதும் உதவி யாக இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை திகழ்வதாக வும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், ஜவுளி மதிப்புச் சங்கிலி யின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பது அரசின் முக்கிய பொறுப்பாகும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள 11 சத விகித பருத்தி இறக்குமதி வரியை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத் துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் போட்டித்திறனை உயர்த்தி, ஏற்றுமதியை அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்புகளையும் பாதுகாக்கும் என தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.