தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வு வேண்டாம் பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

13 May 2026, 9:01 pm
நீட் தேர்வு வேண்டாம் பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

நீட் தேர்வு வேண்டாம் பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை, மே 13- மருத்துவப் படிப்புகளில் நீட் அடிப்படை யிலான சேர்க்கையை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே இடங்களை நிரப்ப அனுமதிக்கவும் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் சுமார் 1.4 லட்சம் தமிழக விண்ணப்ப தாரர்கள் உட்பட நாடு முழுவதும் 22,05,035 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.

வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரணை மேற்கொண்டன.

அதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை முழுமையாக ரத்து செய்தது.

மேலும் இந்த வழக்கு விசார ணைக்காக சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கை நாடு முழு வதும் உள்ள லட்சக்கணக்கான மருத்து வப் படிப்பு மாணவர்களின் நம்பிக்கை யை சிதைத்துள்ளது என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு ஆறு மாநிலங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

அந்த கசிவை அடுத்து உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதா கிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு 95 விரி வான சீர்திருத்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

அனைத்தையும் மீறி இரண்டே ஆண்டுகளில் மீண்டும் வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளது தேசிய அளவிலான இந்த தேர்வில் உள்ள கட்டமைப்பு ரீதி யான குறைபாடுகளுக்கு உறுதியான சான்று.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதலே தமிழ்நாடு அரசு ஒருமித்த குரலில் இதனை எதிர்த்து வருகிறது.

கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ் வழிக் கல்வி பயின்றோர் மற்றும் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.