தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

23 Sept 2026, 11:18 pm
சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை, செப். 23 -சென்னை விமானநிலையத்தை, இந்திய விமான நிலைய ஆணையம்(AAI) நிர்வகித்து வரும் நிலையில்அதனை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப்விஜய் கடந்த ஆகஸ்ட் 5 அன்று கடிதம்எழுதியதாக தகவல்கள் வெளியாகின. இந்தக் கடிதத்தை தமிழக அரசுமறைத்து விட்டதாகவும் குற்றச்சா ட்டுக்கள் எழுந்தன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் வலி யுறுத்தினர். அந்தக் கடிதம் உண்மை என் றால் விமான நிலையத்தைதனியார் வசம் ஒப்படைக்கக் கோரியதை முதலமைச்சர் திரும்பப்பெற வேண்டும்என்றும் கூறினர். எனினும், இதுவரையிலும் அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் விஜய் எழுதியதாக கூறப்படும் அந்தக் கடிதத்தின் நகல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் வருகையில் சென்னை விமான நிலையம் கொல்கத்தாவுக்குப் பின் 6-ஆவது இடத்திற்குச்சென்றுள்ளதாகவும், 2025-26-இல் 2.31 கோடி பயணிகளையும் 1,58,702 விமானங்களையும் மட்டுமே கையாண்டதாகவும், சரக்கு விமான வளர்ச்சியில் பெங்களூருவை விட (14.5 சதவிகிதம்) மிகவும்பின்தங்கி 6 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளதாகவும் முதல்வர் விஜய்-யின் கடிதத்தில் தரவுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

கழிப்பறை பராமரிப்பின்மை, குளிரூட்டி பழுது, வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தரமான விமான நிலைய நிர்வாகம் அவசியம் எனக் கூறி, ஏஏஐ-க்குப் பதிலாக தனியார் அல்லது வேறு நிறுவனத்திடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் எனமுதல்வர் விஜய் கடிதத்தில் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.