முந்தய பக்கம்

வெற்றிப் பயணத் திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

2 Oct 2026, 9:21 pm
வெற்றிப் பயணத் திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

வெற்றிப் பயணத் திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

சென்னை, அக். 2 –தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை, மகாத்மா காந்தி பிறந்த நாளில், (அக். 2) அன்று, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் துவக்கிவைத்தார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில், காலை 10 மணியளவில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், பின்னர் திட்டத்துக்காக நிறுத்தப்பட்டிருந்த சென்னை – காஞ்சிபுரம் (76பி) பேருந்தில் ஏறி,கட்டணமில்லா முதல் பயணச்சீட்டைப் பெண் பயணி ஒருவருக்குத் தமது கையால் வழங்கினார். இத்திட்டத்திற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 24 அன்று சட்டப்பேரவையின் விதி எண்: 110-இன் கீழ் வெளியிட்டிருந்த முதல்வர், தற்போது திட்டத்தையும் துவக்கி வைத்துள்ளார்.

இதன்படி, கடந்த திமுக ஆட்சியில் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின்கீழ் சாதாரணப் பேருந்துகளில் மட்டுமே இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரணப் பேருந்துகள், 40 கி.மீ. மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம், 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 12,602 பேருந்துகள் மூலம் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவர் என அரசு தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram