தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்!
28 Sept 2026, 10:54 pm

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்!

மதுரையில், ‘தாய்மாமன் தங்கமோதிர’த் திட்டத்தைத் துவக்கி வைத்த முதல்வர் விஜய், புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியத்தையும் திறந்துவைத்தார். விழாவில், அமைச்சர் என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார். கோ.க. அருண் ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

சென்னை/மதுரை, செப். 28 -

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும், “தாய்

மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை (செப். 28) அன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்த்தாய்

மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் பேசினார். பின்னர் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள், தாய்மார்களைச் சந்தித்தும் நலம் விசாரித்தார்.

எந்தெந்தக் குழந்தைகளுக்கு முதலமைச்சர் கைகளால் மோதிரம் அணிவிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. தாய்மார்கள்தங்கள் குழந்தைகளை முதலமைச்சரின் கையில் கொடுத்து அவருடன்செல்பி எடுத்துக்கொண்டனர். குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியபடி அவர் அன்புடன் மோதிரம் அணிவித்தார்.

திட்டத்தின் நடைமுறை

2026 ஜூன் 22 முதல் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். செப்டம்பர் 28-க்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரசவம் நடைபெறும் அரசு மருத்துவ மனையிலேயே மோதிரம் வழங்கப்படும்.

காந்தி அருங்காட்சியகம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் விழா நிறைவடைந்ததும், மதுரை ஆட்சியர் அலுவலகச் சாலையில் ரூ.10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

சென்னை திரும்பினார்

பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், உள்ளூர் அமைச்சர்கள், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 4.30 மணிக்குக் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் சென்னைக்குத் திரும்பினார்.15 பேர் மயக்கம்முன்னதாக, முதல்வர் மருத்துவமனைக்கு வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்ததன் காரணமாக பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கிவிழுந்தனர். அவர்கள், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.