புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்!
yesterday

பெரம்பூரில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்குச் சென்ற முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, பெரம்பூர் தொகுதியை சேர்ந்த 10 பயணாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

இம்மாத இறுதிக்குள் 73,000 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.