தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

250 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

yesterday
250 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கத்தின், 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 697 கோடி ரூபாய் செலவில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஐந்து பணிமனைகள் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து. 1,337 கோடி ரூபாய் மதிப்பிலான 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் 7 பணிமனைகள் மூலம் இயக்கிடத் திட்டமிடப்பட்டு, அதன் முதற்கட்டமாக 234 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவை இன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 756 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,614 புதிய பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டு. 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் முதற்கட்டமாக 55 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 120 புதிய பேருந்துகளின் சேவை தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார். போக்குவரத்துத் துறை செயலாளர் இல.நிர்மல்ராஜ். இ.ஆ.ப. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.