தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

9 Jul 2026, 9:12 pm
​​​​​​​தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதல்வர் விஜய் இன்று முதல் 2 நாட்கள் கரூரில் சுற்றுப்பயணம் 32 பேருக்கு அரசுப் பணி ஆணையையும் வழங்குகிறார்

சென்னை, ஜூலை 9 - முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஜூலை 10, 11 ஆகிய 2 நாட்கள், கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜூலை 10 அன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ. 1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் சுமார் 13,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படும் நிலையில், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நிகழ்ச்சிக்காக, கரூர் - சேலம் சாலையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான அட்லஸ் விளையாட்டு மைதானத்தில் 6 ஏக்கர் பரப்பளவில், சுமார் 5000 பேர் பங்கேற்கும் அளவில் பிரம்மாண்ட மேடை பந்தல் அமைப்பு ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். ரோடு ஷோ இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பிற்பகல் 3 மணி அளவில் கரூர் - சேலம் புறவழிச்சாலையில் இருந்து கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, திருமாநிலையூர் வழியாக சுங்கச்சாவடி, தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் வழி யாக முதலமைச்சர் விஜய், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்கிறார். பலத்த பாதுகாப்பு முதல்வர் பயணத்தையொட்டி கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் சுமார் 6,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பனகல் அரசர் பிறந்தநாள் : முதலமைச்சர் புகழஞ்சலி!

சென்னை, ஜூலை 9 - சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாளில் அவருக்குத் தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துவ தாக தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சியை உருவாக்கிய வர்களில் ஒருவராகத் திகழ்ந்த பனகல் அரசர், அனை வருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தியதாகவும், அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள் பின்னாளில் தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தள மாக அமைந்தன எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்கான காவிரி நீரை கேட்டுப் பெற வேண்டும்! அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 9 - தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்துவிட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரி வித்துள்ளார். ஜூலையில் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீ ரையும் கர்நாடகம் தர மறுக்கிறது எனவும், ஆளுங்கட்சி யுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சியின் ஆட்சி தான் கர்நாடகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முத லமைச்சர் கேட்டுப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ராஜினாமா எம்எல்ஏ-க்கள் சபாநாயகரிடம் விளக்கம்

சென்னை, ஜூலை 9 - அதிமுக எம்எல்ஏ-க்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய மூவரும் மே 25 அன்று தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இது ‘குதிரை பேரம்’ எனக் குற்றம் சாட்டி அதிமுக இவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே, ராஜினாமா காரணம் குறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த இந்த மூவரும், சபாநாயகர் உத்தரவிட்டதைத் தொட ர்ந்து, இரண்டாவது முறையாக நேரில் வந்து சபநாயகரிடம் வியாழனன்று விளக்கம் அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.