கரூரில் பலியான குடும்பங்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!
10 Jul 2026, 8:37 pm

கரூரில் பலியான குடும்பங்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

முதலமைச்சர் விஜய் வழங்கினார் சென்னை, ஜூலை 10 - கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர் களில் 32 குடும்பங்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இரண்டு நாள் பயணமாக, முத லமைச்சர் விஜய், வெள்ளிக்கிழமை யன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குச் சென் றார். அ

ங்கிருந்து சாலை மார்க்க மாக கரூர் வந்த அவர், திருகாம்பலி யூர் பைபாஸ், பழைய பேருந்து நிலை யம், ரவுண்டானா, உழவர் சந்தை, காங்கேயம் சாலை வழியாக சுமார் 10 கி.மீ தூரத்திற்கு சாலைவலம் சென்றார்.

வழிநெடுகிலும் அவருக்கு மலர் தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

32 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை! தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுடைய 32 பேருக்கு அவர்களது கல்வித் தகு திக்கு ஏற்ப அரசுத் துறைகளில் கரு ணை அடிப்படையிலான பணி நிய மன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், பல்வேறு துறை களின் கீழ் பயனாளிகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மக்கள் சந்திப்பு அதைத்தொடர்ந்து, கரூர் - சேலம் புறவழிச்சாலையில் உள்ள வெண் ணெய்மலை அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முத லமைச்சர் விஜய், “தவெக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. அரசு அலு வலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது,” என்றார்.

திமுக-வைக் கடுமையாகச் சாடிய அவர், செப்டம்பர் 27 அன்று, நாமக் கல்லில் இருந்து கரூர் வந்தபோது, காவல்துறையினர் எச்சரிக்கவில்லை எனவும், நெடுஞ்சாலையில் இருந்து போலீசார் தான், தங்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் குற்றம் சாட்டினார். த

னது வாழ்வில் அனைத்தையும் விட வலியும், காயமும் ஏற்படுத்தி யது கரூர் சம்பவம்தான், என்று தெரி வித்த விஜய், இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டாலும், அது போதாது, எழவே முடியாத அளவிற்கு நிரந்தர மான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், தவெக-வுக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும், தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானவாசி ஊராட்சியில், சுமார் ரூ. 1,700 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள தனியார் தோல் சாரா காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.