புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம்:முதல்வர் விஜய் திறந்து வைத்தார்! ரூ. 62.73 கோடியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கல்
2 Nov 2026, 10:58 pm

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம்:முதல்வர் விஜய் திறந்து வைத்தார்! ரூ. 62.73 கோடியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கல்

புதுக்கோட்டை, நவ. 2- புதுக்கோட்டையில் ரூ. 23.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திங்கள்கிழமை திறந்து வைத்தார். திங்களன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், ஆலங்குடியில் ரூ. 1.60 கோடி

யில் கட்டப்பட்ட அறிவுசார் மையம், கீரமங்கலத்தில் ரூ. 1.50 கோடி

யில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளா

கத்தில் ரூ. 6.29 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

மேலும், மாவட்டத்தில் ரூ. 68.31 கோடி செலவில் நிறை வேற்றப்பட்ட 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்ததுடன், ரூ.11.72 கோடி மதிப்பீட்டில் 70 புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 13,676 பயனாளிகளுக்கு ரூ. 62.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

20,077 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதியபேருந்து நிலையத்தில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 74 கடைகள், இரண்டு உணவகங்கள், பயணிகள் காத்திருப்பு அறை,தாய்மார்கள் பாலூட்டும் அறை, தனித்தனி கழிப்பறைகள், குடிநீர் வசதி ஆகியவை இடம்பெற்று ள்ளன. சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.விழாவில் அமைச்சர்கள் நா. ஆனந்த், ஜா. முகமது பர்வேஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ, ஜோதிமணி, கே. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் என். சுப்ரமணியன், நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் மு. அருணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (ந.நி.)