குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
28 Jun 2026, 9:24 pm

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 28 - இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடை பெற்று வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெற்றன.

அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அங்கன்வாடி மையங் கள், சத்துணவு மையங் கள், பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 43,051 மையங் களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தை களுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 5.56 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 1,641 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இப்பணியில் 6,564 பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னை பால வாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 2026-ஐ முத லமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு நேரில் சொட்டு மருந்து ஊற்றிய அவர், சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளுக்கு பொம்மைகளையும் பரிசாக வழங்கினார். அமைச்சர் அருண்ராஜ் உடனிருந்தார்.