ஐடிஐ-களில் நவீன மின் ஆய்வகங்கள்! முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
28 Oct 2026, 9:57 pm

ஐடிஐ-களில் நவீன மின் ஆய்வகங்கள்! முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

சென்னை, அக். 28 -சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், ‘ஷ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா’ (Schneider Electric India) நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்ட மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதல்வர் ச. ஜோசப் விஜய் திறந்துவைத்தார்.

வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில், ரூ. 5.10 கோடி செலவில் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 40 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ. 6.80 கோடி செலவில் நவீன மின் ஆய்வகங்களை அமைப்பதற்கும், ‘ஷ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா’ நிறுவனத்துக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்துக்கும் இடையே முதல்வர் முன்னிலையில்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரீஷியன், வயர்மேன் பிரிவு மாணவர்களுக்குப் பயிற்சி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார்.

59-ஆவது மாநில அளவிலான திறன் போட்டியில் (2026) வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா ரூ. 25,000-க்கான காசோலைகள், அகில இந்தியத் தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த 60 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 673 இளநிலைப் பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

காது கேளாத, பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவர்களையும், ஜப்பானின் நிசான் (EHIME NISSAN) நிறுவனத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களையும் சந்தித்துப் பாராட்டினார்.

விழாவில் அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், துறைச் செயலாளர் கொ. வீரராகவ ராவ், இயக்குநர் சி. பழனி, ஷ்னைடர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஷர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.