தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்வித்துறை காலிப் பணியிட நியமனம்; அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

6 Jul 2026, 9:03 pm
கல்வித்துறை காலிப் பணியிட நியமனம்; அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

கல்வித்துறை காலிப் பணியிட நியமனம்; அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை, ஜூலை 6 - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில், துறை வாரியாகப் புதிய திட்ட ங்களை அறிமுகப்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் ஜூன் 2 துவங்கி துறை வாரி ஆலோசனைக் கூட்டங் களை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் நடை பெற்று வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, துறைவாரியாகச் சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் கேட்டறிந்து வரு கிறார். இந்தக் கூட்டங்கள் ஜூலை 22 வரை நடைபெற வுள்ளன.

இதனொரு பகுதியாக, சென்னை தலைமைச் செய லகத்தில், திங்கட்கிழமை யன்று உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அத்துறை அதிகாரிகளுடன் முத லமைச்சர் விஜய் ஆலோச னை நடத்தினார்.

உயர்கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்புவது, பல்கலைக் கழகத் துணைவேந்தர் நிய மனம் ஆகியவை தொடர் பாக இக்கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முழு வதும் உள்ள அரசுப் பல்க லைக்கழகங்கள், அரசு கலைக் கல்லூரிகளில் உத விப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணி யிடங்களை நிரப்புவது குறித்தும், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களைப் போன்று தமிழ்நாட்டில் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் குறித்தும் முத லமைச்சர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப் படுகிறது.

கூட்டத்தில் உயர்கல்வி த்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், நிதி அமைச் சர் மரிய வில்சன், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிற்பகலில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.