முந்தய பக்கம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! – தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

yesterday
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! – தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
<p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p>அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.</p><p>இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக 7,537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர் கூடுதலாகப் பயன்பெறுகின்றனர். இதற்கென நடப்பு நிதியாண்டில் 217 கோடியே 63 லட்சம் ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 34.64 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram