முந்தய பக்கம்

ஜூன் 29, 30 மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு

26 Jun 2026, 10:18 pm
ஜூன் 29, 30 மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு

ஜூன் 29, 30 மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு

முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், ஜூன் 29 மற்றும் 30 ஆம் தேதி களில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் மாநாட்டை முதலமைச்சர் விஜய் கூட்டி யுள்ளார். டிஜிபி, அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வனத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். மாநாடு 3 அமர்வுகளாக நடத்தப்படவுள்ளது. முதல் அமர்வில் ஆட்சியர்களும் காவல் அதிகாரிகளும் இணைந்து சட்டம்-ஒழுங்கு நிலவரம், உளவுத்தகவல் சேகரிப்பு, பெண்கள் பாது காப்பு, போக்சோ வழக்குகளின் நிலை, சைபர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இரண்டாம் அமர்வில் ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்று அனைத்து அரசுத் துறை சேவைகளும் மக்களை சென்றடை கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். மூன்றாம் அமர்வில் ஆட்சியர்களும் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து கலந்தாலோசிக்கின்றனர். இரண்டு நாள் அமர்வுகளின் நிறைவில் முதலமைச்சர் விஜய் உரையாற்றி திறமையாக செயல்பட்ட அதிகாரிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்குவார்.

Share
FacebookXWhatsAppTelegram