பெருந்துறையில் நலத்திட்ட உதவிகள்;முதலமைச்சர் விஜய் வழங்கினார்!
3 Nov 2026, 10:30 pm

பெருந்துறையில் நலத்திட்ட உதவிகள்;முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

ஈரோடு, நவ. 3 -ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற விழாவில், மாநிலம் முழுவதும்26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான 3,000 கோடி ரூபாய் வங்கி நிதிஇணைப்புகளை, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

இதில், 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளை வழங்கினார். மேலும், பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகளையும், இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி தொடங்குவதற்கான அனுமதி ஆணைகள் மற்றும்மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனை அங்காடிகள் அமைப்பத ற்கான அனுமதி ஆணைகளையும்வழங்கினார்.

“ஒரு வேர் எண்ணற்ற தொழில்கள்” என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடந்து வந்த ‘வெற்றிப் பாதையை’ நோக்கி தமிழ்நாட்டின் 40 ஆண்டுகால ‘பெண்மையின் பேரெழுச்சி’ என்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய கண்காட்சிஅரங்குகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.இவ்விழாவில், அமைச்சர்கள் நா.ஆனந்த், கோ.க.அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், வே. சம்பத் குமார்,ம. விஜய் பாலாஜி, சி. விஜயலட்சுமி,ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.