தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.5,110 கோடி நிலுவை தொகையை விடுவிக்க முதல்வர் கோரிக்கை

11 Oct 2026, 10:19 pm
ரூ.5,110 கோடி நிலுவை தொகையை விடுவிக்க முதல்வர் கோரிக்கை

ரூ.5,110 கோடி நிலுவை தொகையை விடுவிக்க முதல்வர் கோரிக்கை

சென்னை, அக்.11 -சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில்,பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முக்கியத் தேவைகள் தொடர்பான விரிவான கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, “ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது அதன் பலன் மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே தமது அணுகுமுறை” என்றார்.

மெட்ரோ கோரிக்கைகள்

விமான நிலையம் - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், கோயம்பேடு - பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிய சுமார் 65 கி.மீ. தொலைவிலான மூன்றாம் கட்டத் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான முன்மொழிவை மறுபரிசீலனை செய்யவும், ஓசூர் - பொம்மசந்திரா (பெங்களூரு) மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் வலியுறுத்தினார்.

சாலை, நீர், மொழி தொடர்பான கோரிக்கைகள்

ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு - திருச்சி, திருச்சி - பஞ்சப்பூர் - ஜெயங்கொண்டம் - கரூர், கரூர் - கோயம்புத்தூர் ஆகியவற்றை ஆறு வழிச்சாலைகளாகவிரிவாக்கவும், மாதவரம் - சோழவரம் இடையே உயர்மட்டச் சாலை அமைக்கவும் அவர் கோரினார்.மாநிலங்களுக்கிடையே நீர் சமநிலைக்கு நதிகள் இணைப்பு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், கோதாவரி - காவிரி இணைப்பைத் தேசியத் திட்டமாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழைப் பயன்படுத்த அனுமதி கோரி, சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நிதி தொடர்பான கோரிக்கைகள்

சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்றிய அரசின் பங்கான ரூ.5,110 கோடி நிலுவையில் உள்ளதாகவும், அதை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், வெள்ள நிவாரணம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்காகத் தமிழகம் கோரிய சிறப்பு நிதியைஉடனடியாக ஒதுக்கவும், வரிப் பகிர்வில் உரியபங்கை வழங்கவும் கேட்டுக் கொண்டார்.

தொழில், கல்வி, மீனவர் நலன்

செமிகண்டக்டர் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம், மின்சார வாகனத் தயாரிப்பு மண்டலங்கள் போன்ற உயர் தொழில்நுட்பச் சிறப்பு மண்டலங்களைத் தமிழகத்தில் அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். சென்னை ஐஐடி போன்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் கிராமப்புற மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு மையங்கள் அமைக்கத் தேவையான நிதியை ஒன்றிய கல்வி, தொழிலாளர் நலத்துறைஅமைச்சகங்கள் வழங்க வேண்டும் என்றும் கேட்டார். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்வதால், அதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தின் நியாயமான தேவைகள் காலதாமதமின்றி நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் தமது உரையைநிறைவு செய்தார்.

விழாவில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள் ‘அடுத்த பிரதமர் விஜய்’ என முழக்கமிட்டனர். அவ்வாறு எழுதப்பட்ட அட்டைகளையும், முதல்வரின் புகைப்படத்தையும் உயர்த்திக் காட்டினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.