தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யச் சொல்வதா? பிரதமருக்கு எழுதிய கடிதத்தை முதல்வர் விஜய் திரும்பப்பெற வேண்டும்!

16 May 2026, 10:34 pm
பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யச் சொல்வதா? பிரதமருக்கு எழுதிய கடிதத்தை  முதல்வர் விஜய் திரும்பப்பெற வேண்டும்!

பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யச் சொல்வதா? பிரதமருக்கு எழுதிய கடிதத்தை முதல்வர் விஜய் திரும்பப்பெற வேண்டும்!

சென்னை, மே 16 - இறக்குமதி பருத்திக்கு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிர தமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தை முதல்வர் விஜய் திரும் பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி. நட ராஜன் அறிக்கை ஒன்றை விடுத்துள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு எதிராக கடிதம் எழுதலாமா?

இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படுகிற 11 சத விகித வரியை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இத னால், உள்நாட்டு பருத்தி விலை வீழ்ச்சி அடைந்து பருத்தி விவசாயி கள் தான் கடுமையாக பாதிக்கப்படு வார்கள் எனும் நிலையில், பருத்தி விவசாயிகளுக்கு எதிராக- முதல் வர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுத லாமா?

கடந்த 2025 செப்டம்பர் 30 வரை பருத்தி இறக்குமதிக்கான 11 சத விகித வரியை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்தது, பின்னர் 2025 டிசம்பர் 31 வரை அதைக் கால நீட்டிப்பு செய்தது. ஒன்றிய அரசு பருத்திக் கான இறக்குமதி வரியை ரத்து செய்ததை, அப்போதே அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) உள்ளிட்ட விவசாயிகள் அமைப்புகள் கண்டித்தன. ஒன்றிய பாஜக அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும். இறக்குமதி பருத்திக்கு வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்த விவசாயிகள்

இறக்குமதி பருத்திக்கு வரியை ரத்து செய்த காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இரு ந்து, 4.13 மில்லியன் டன் பருத்தியை இந்தியா இறக்குமதி செய்தது. இத னால் உள்நாட்டில் ஒரு குவிண்டால் பருத்திக்கு 1200 ரூபாய் வரை விலை வீழ்ச்சி அடைந்து இந்திய பருத்தி விவசாயிகள் பல்லாயிரம் கோடி ரூபாயை இழந்தார்கள். மகா ராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி சாகு படி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டார்கள்.

குவிண்டாலுக்கு ரூ.1,200 நஷ்டம்

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஆதார விலை (MSP) ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 120 விலை கிடைக் காமல் ஒரு குவிண்டால் பருத்திக்கு 5 ஆயிரத்து 800-இல் இருந்து ரூ.6 ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே தமி ழக விவசாயிகளுக்கு விலையாக கிடைத்தது. ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவான விலைக்கு விற்று பருத்தி விவசாயிகள் தமிழகத்தில் நட்டம் அடைந்தார்கள்.

கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்!

இந்நிலையில், கடந்த ஆண்டு அனுபவம் இப்படி இருக்கும் போது பருத்தி இறக்குமதி வரியை 2026 ஆண்டிலும் ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் விஜய், ஒன்றிய பாஜக அரசுக்கு கடிதம் எழுதியது நாடு முழுவதும் இருக்கிற பருத்தி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிற செயலாகும். எனவே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடி தத்தை முதலமைச்சர் விஜய் திரும் பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.