முதலமைச்சர் விஜய்க்கு கோவையில் வரவேற்பு
1 Oct 2026, 12:48 am

முதலமைச்சர் விஜய்க்கு கோவையில் வரவேற்பு

கோவை, செப்.30-தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்தடைந்த, முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் புதனன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.கோவை விமான நிலையம் வந்தடைந்த தவெக தலைவர் விஜயை, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கணியூர், சுங்கச்சாவடி, கருமத்தம்பட்டி, சோமனூர் மற்றும் பல்லடம் வழியாக அவர் தாராபுரம் சென்றார். கோவை விமான நிலையத்திலிருந்து கிளம்பியது முதலே வழிநெடுகிலும் நின்றிருந்த தொண்டர்கள் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர். விஜய்யின் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கோவை மாவட்டத்தில் சுமார் 1,500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.