தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday

முதல்வர் பிறந்த நாள்; சபாநாயகர் வாழ்த்து!

சென்னை: இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை, ஜூன் 22 காலை மீண்டும் கூடியது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் பிறந்த நாளை கொண்டாடும் ஜோசப் விஜய்க்கு சட்டப்பேரவை யில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டம் தொடங்கி யதும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், “முத லமைச்சர் விஜய் 52-வது வயதை நிறைவு செய்து 53-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அரசியல் களத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைத்து முதலமைச்சர் விஜய் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

சென்னை மேயர் அவமதித்தாரா? எம்எல்ஏ அளித்த புகார் மீது நடவடிக்கை தேவையில்லை!

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தொடக்க விழாவில் மேயர் பிரியா ராஜன் மற்றும் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் பங்கேற்றனர். மாநகராட்சி நிதியில் கட்டப் பட்ட கட்டடம் என்ற அடிப்படையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தனக்கு அடுத்தபடியாக விளக்கேற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் மெழுகுவர்த்தியை வழங்கினார். ஆனால், இந்த விழாவில் தாம் அவமதிக்கப்பட்டதாக, திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ பல்லவி புகார் எழுப்பியிருந்தார். இதுபற்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திங்க ளன்று சட்டமன்றத்தில் பதிலளித்தார். அப்போது, பல்லவி யின் புகாரை நன்கு படித்து ஆய்வு செய்ததாகவும், திரு.வி.க. நகர் நிகழ்வு, மரபு நெறிமுறைகள் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ நடந்த நிகழ்வு. அது இனிவரும் காலங்களில் தொடராது என்று நம்புகிறேன். அதனால், அந்த மனுவின் மீது மேல் நடவடிக்கை தேவை யில்லை என்று கருதுகிறேன். உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ, வேறு நடவடிக்கை எடுப்பதோ தேவை யில்லை என கருதுகிறேன் என்றும் சபாநாயகர் தெரிவித் துள்ளார்.