ஜோதிடர், முதல்வரின் அரசியல் பிரிவு அதிகாரியா?
12 May 2026, 11:40 pm

ஜோதிடர், முதல்வரின் அரசியல் பிரிவு அதிகாரியா?

பெ. சண்முகம் கண்டனம் சென்னை, மே 12 - முதலமைச்சர் ஜோசப் விஜய், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டை, தனக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டிருப்பதற்கு, கண்டனங்கள் எழுந்துள்ளன.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி யில் பிறந்தவரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், 1989 முதல் 2016 வரை, முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வந்தார். ஜெயலலிதா மறை வுக்குப் பின், தவெக தலைவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக மாறிய பண்டிட், 2026-இல் விஜய் முதலமைச்சராவார் என யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தார். இவர் நாள் குறித்து கொடுத்தபடியே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இவரை, தவெக மாநில செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்திருந்த விஜய், தான் முதலமைச்சரான பின்னணியில், தனக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.

இதற்கு, சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறி விக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர். அரசுச் செலவில் அதிகாரி யாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். “ஜோதிடம் தனை இகழ்” என்றார் பாரதி யார். எனவே, அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இந்த ஜோதிடர் அரசியல் ஆலோசனை களை கூறுவார் என்பதும் ஏற்புடை யதல்ல!” என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய அரசாங்கமே! இது வல்ல இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு... ஜோதிடம் தீர்மானி க்குமா நல்ல நிர்வாகத்தையும் வளர்ச்சி யையும்... அரசியலை அறிவியல் பூர்வமாக அணுகுங்கள்...” என்று சிபிஎம் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும், தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.