தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

13 May 2026, 10:10 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சட்டப்பேரவையில் எதிரொலித்த ஜோதிடர் நியமன விவகாரம்

சென்னை, மே 13 - முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு ஆலோசக ராக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நிய மிக்கப்பட்ட விவகாரம், சட்டப்பேரவையிலும் கடுமையாக எதிரொலித்தது. முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், விஜய் முதலமைச்ச ராக பதவியேற்ற பின்னர், முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு தவெக ஆட்சியமைக்க ஆதர வளித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல கட்சி களின் மாநிலத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரி வித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கம் உட்பட பல்வேறு முற்போக்கு அமைப்பு களும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத் தின்போது தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை யும் இந்த நியமனத்தை கடுமையாக எதிர்த்தன. தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் விஜய்யை நேருக்கு நேராகவே, “உங்களது ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

குதிரை பேரம் இல்லை: அமைச்சர்

சென்னை, மே 13- சட்டப் பேரவையில் அரசு மீது எழுந்த கடும் விமர்சனங் களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் கொடுத் தார். “தவெகவுக்கு குதிரை பேரம் நடத்த வேண்டிய அவ சியம் இல்லை. இது குதிரை பேர அரசு இல்லை. நீட் தேர்வு வேண்டாம் என்பதே தவெகவின் தெளிவான நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.

உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க்

சென்னை: வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அஸ்ரா கார்க், தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி.யாக நிய மிக்கப்பட்டுள்ளார். இது வரை உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டு, அவரது இடத்தில் அஸ்ரா கார்க் பொறுப்பேற்றுள்ளார்.

எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சென்னை: கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக் களித்த அதிமுக எம்எல்ஏக் கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாய கரிடம் புகார் அளிக்க உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி சட்டப்பே ரவை வளாகத்தில் புதனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.