போதை விழிப்புணர்வு மாரத்தான்: மெரினாவில் மக்களுடன் ஓடிய முதல்வர் விஜய்!
26 Jun 2026, 10:16 pm

போதை விழிப்புணர்வு மாரத்தான்: மெரினாவில் மக்களுடன் ஓடிய முதல்வர் விஜய்!

சென்னை, ஜூன் 26: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “Start Run, Stop Drugs” விழிப்புணர்வு மாரத்தான் சென்னை மெரினாவில் நடைபெற்றது. இப் போட்டியை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

மாரத்தானைத் தொடங்கி வைத்த முத லமைச்சர் விஜய், மக்களுடன் இணைந்து மெரினா சாலையில் நேரடியாக ஓடினார். இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக் கான இளைஞர்கள் பங்கேற்றனர். முன்ன தாக, தமிழ்நாட்டில் போதைப் பொருட் களை வேரறுக்கத் துணை நிற்போம் என்ற உறுதிமொழியை முதலமைச்சர் தலைமை யில் அனைவரும் ஏற்றனர்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளி யிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இளை ஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கிய மான தமிழ்நாட்டை உருவாக்கவும் சமூகத் தின் கூட்டு முயற்சி அவசியம். கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் போதைப் பொருட்களை ஒழித்து வலிமையான சமுதா யத்தைப் படைக்க உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.