தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் கட்டணமின்றி தொடர்ந்து பயணிக்கலாம்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

30 May 2026, 8:39 pm
மாணவர்கள் கட்டணமின்றி தொடர்ந்து பயணிக்கலாம்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மாணவர்கள் கட்டணமின்றி தொடர்ந்து பயணிக்கலாம்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை, மே 30- புதிய கல்வியாண்டுக் கான இலவசப் பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப் படும் வரை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அர சுப் பேருந்துகளில் கட்டண மின்றி பயணிக்கலாம் என முதலமைச்சர் விஜய் அறி வித்துள்ளார்.

“கோடை விடுமுறை முடி வடைந்து ஜூன் 4 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப் படவிருக்கும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகி யுள்ளது. சீருடை அணிந்த பள்ளி மாணவ - மாணவியர் தாங்கள் படிக்கும் பள்ளி வரை இலவசமாகப் பய ணிக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்க ளில் பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையை நடத்துநரிடம் காட்டி இல வசமாகப் பயணிக்கலாம்” என்று முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.

மேலும், பள்ளி தொடங் கும் மற்றும் முடியும் நேரங்க ளில் பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்குவதை கண்காணிக்க போக்கு வரத்துக் கழக அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளதாகவும், மாணவர் களைப் பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லுமாறு அனை த்து நடத்துநர், ஓட்டுநர் களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.