தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

16 Jun 2026, 12:38 pm
கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

கடந்த மே 25-ஆம் தேதி, ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து, இக்கடன் தள்ளுபடி வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.