முதலமைச்சர் விஜய் 52-வது பிறந்தநாள் கள்ளக்குறிச்சியில் தொண்டர்கள் அன்னதானம்
yesterday
<p><strong>முதலமைச்சர் விஜய் 52-வது பிறந்தநாள் கள்ளக்குறிச்சியில் தொண்டர்கள் அன்னதானம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 22- தமிழக முதலமைச்சர் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுநல நிகழ்ச்சிகள் திங்களன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி கவரைத் தெருவில் பிரமாண்டமான முறையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதலே திரளாகக் கூடி வந்த பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் இளை ஞர்களுக்குச் சுடச்சுட உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், முதலமைச்சர் விஜய்க்குத் தங்கள் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கள்ளக் குறிச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ், நகரச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் எஸ்.ஹரிஹரன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் என். சீனுவாசன், என். கிருஷ்ண ராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றுத் தலைமை தாங்கி நடத்தினர். இது குறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில், “முதல மைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உணவு, இனிப்பு வகைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தனர்.</p>
