தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

200 யூனிட் இலவச மின்சாரம்: முதலமைச்சர் விஜய் உத்தரவு - அரசாணை வெளியீடு

10 May 2026, 8:41 pm
200 யூனிட் இலவச மின்சாரம்:  முதலமைச்சர் விஜய் உத்தரவு - அரசாணை வெளியீடு

200 யூனிட் இலவச மின்சாரம்: முதலமைச்சர் விஜய் உத்தரவு - அரசாணை வெளியீடு

சென்னை, மே 10 - தமிழகத்தின் 14-ஆவது முத லமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், தனது முதல் நடவடிக்கை யாக தமிழ்நாட்டு மக்களுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான அரசாணை யில் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை (G.O. Ms. No. 50) மின்துறை உடனடியாக ஞாயிறன்றே வெளியிட்டுள்ளது. இ

ந்த அரசாணை யின் முக்கிய அம்சங்கள் வருமாறு: யாருக்கெல்லாம் பொருந்தும்? இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்படும் வீட்டு உபயோக மின் நுகர்வோர்களில் (Domestic Consumers), 500 யூனிட்டுகளுக்கு மிகாமல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் பொருந்தும்.

இதன்படி, • 500 யூனிட்டுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துபவர்களுக்கு இனி இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

• 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, தற் போது நடைமுறையில் உள்ள கட்டண அமைப்பே தொடரும்.

அவர் களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சார நடைமுறை மாற்றமின்றி நீடிக்கும்.

கூடுதல் செலவு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்து வதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடு தலாக 1,730 கோடி ரூபாய் மானியச் செலவு ஏற்படும்.

இந்தப் பணத்தைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகத்திற்கு மானியமாக வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த அரசாணை உடனடியாக, அதாவது மே 10, 2026 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மேலதிக விபரங்களுக்கு 2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட் ஜெட்டில் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்றும், அதுவரை அவசர நிதியிலிருந்து (Contingency Fund) இதற்கான செலவினங்கள் மேற் கொள்ளப்படும் என்றும் அரசாணை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.