முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி : முன்பதிவு செய்ய ஆக.30 கடைசி நாள்
10 Aug 2026, 8:35 pm

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி : முன்பதிவு செய்ய ஆக.30 கடைசி நாள்

தேனி ஆட்சியர் வைத்திநாதன் தகவல்

தேனி ,ஆக.10-முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது .பங்கு பெற ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்வைத்திநாதன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில்நடத்தி வருகிறது. முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம்தேதி மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோர் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் 31.08.2026-க்குள் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட, மண்டல மற்றும் மாநிலஅளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷீ (Wush), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களானகயாக்யிங் (kayaking) மற்றும் கேனோயிங் (canoeing) போன்றபுதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுமொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர்முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.

விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள tncmtrophy.sdat.in என்ற இணையதளம் மூலம் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்: 04546-253090 என்ற எண்ணிற்கு வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் தொடர்புகொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்றஎன்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.