தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

8 Aug 2026, 11:02 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

முதலமைச்சர் கோப்பை: முன்பதிவு துவக்கம்

விருதுநகர், ஆக.8-முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலமான முன்பதிவு ஆக.6 முதல்துவங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம் பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர் விளையாட்டுக்கள் என 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள், 15 வயது முதல் 35 வயது வரையுள்ள பொதுப் பிரிவினர்கள், அனைத்து வயது பிரிவு மாற்றுத் திறனாளிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பணியாளர்கள்

என்ற இணையதளம் மூலம் முன்பதிவு ஆக.6 முதல் துவங்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆக.31 வரை முன்பதிவுசெய்து போட்டிகளில் பங்கேற்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

பரமக்குடியில் ஆக.11 முதல் புத்தகத் திருவிழா

இராமநாதபுரம், ஆக.8-இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா ஆக.11 முதல் 20-ம் தேதி வரை ராஜா மஹாலில் நடைபெற உள்ளது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், உரைவீச்சு மற்றும் முற்போக்கு எழுத்தாளர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள் ளன.

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

விருதுநகர், ஆக.8-விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.மாவட்ட சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி கிருஷ்ணமாச்சாரி சாலை, நகராட்சி சாலை, பாத்திமா நகர், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில்

சுற்றித் திரிந்த தெருநாய்களை பயிற்சி பெற்ற தூய்மைப் பணியாளர்கள் வலை மூலம் பாதுகாப்பாகப் பிடித்தனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கானஅடையாளமாக சிவப்பு மை வைத்தனர்.இப்பணியில் கால்நடை மருத்துவர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள் ராஜபாண்டி, முத்துப்பாண்டி,மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கஞ்சா விற்பனை: 2 பேர் கைது10 கிலோ கஞ்சா, ரூ.30 ஆயிரம் பறிமுதல்

சின்னாளப்பட்டி, ஆக.8-திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நிலக்கோட்டை டி.எஸ்.பி.இளஞ்செழியன் மேற்பார்வையில் வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் கௌதமன், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வத்தலகுண்டு–தேனி சாலையில் கட்டகாமன்பட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாகஆண்டிபட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் (48), பெரியகுளத்தைச் சேர்ந்த மனோஜ் (36) ஆகியோரை கைதுசெய்தனர்.அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

அலங்காநல்லூர் அருகே திருட்டு:50 பவுன் நகை, ரூ.86,500 மீட்பு

மதுரை, ஆக.8-மதுரை அலங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பொதும்பு வானவில் சிட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ரெனோ வீட்டில் வசித்து வந்தார். கடந்த மே 28-ஆம் தேதி ரெனோ தோழிகளுடன் கொடைக்கானல் சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டன.

இதுகுறித்த புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணை

யில், மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பட்டறை சுரேஷ் கைது செய்யப்பட்டார்.விசாரணையில், ஆடம்பர வாழ்க்கைக்காக பல்வேறு இடங்களில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டில்ஈடுபட்டதாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளில் 50 பவுன் மற்றும் ரூ.86,500 ரொக்கம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.