தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 மதுரை மண்டல அளவிலான பளு துாக்கும் போட்டி மதுரை மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

8 Oct 2026, 9:17 pm
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 மதுரை மண்டல அளவிலான பளு துாக்கும் போட்டி மதுரை மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 மதுரை மண்டல அளவிலான பளு துாக்கும் போட்டி மதுரை மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

மதுரை, அக்.8-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோப்பைக்கான மதுரை மண்டல அளவிலான (மதுரை,இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி) பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பளு தூக்கும் போட்டி மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ஸ்டார் அகாடமி தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் மார்க்ஸ் லெனின் ஏற்பாடுகளை செய்தனர்.

பள்ளிகளுக்கான போட்டி முடிவுகள்: 55 கிலோ பிரிவில் கவிமணி கண்டன் 3ம் இடம், 65 கிலோ பிரிவில் சபரி முதலிடம், 95 கிலோ பிரிவில் சந்தோஷ் 95+ கிலோ பிரிவில் சந்துரு ஆகியோர் இடம் பெற்றனர். மாணவிகளுக்கான 53 கிலோ பிரிவில் சாதனா 2ஆம் இடம், 57 கிலோ பிரிவில் கனிஷ்கா முதலிடம், 61 கி பிரிவில் நாகலட்சுமி, 69 கி பிரிவில் ஹரிதா 2ஆம், 77 கி பிரிவில் கோபிகாஸ்ரீ, 77+ கி பிரிவில் அனுபாரதி 2ம்இடம் பெற்றனர்.

கல்லுாரிப் போட்டி முடிவுகள்: 65 கி எடை பிரிவில் யோகராஜ் 2ஆம் இடம், 70 கி பிரிவில் சஞ்சய் முதலிடம் 75 கி பிரிவில் அகமது அப்துல் அஜீஸ் நேரடி, 85 கிலோ பிரிவில் மதன் 3ம் இடம், 110 கிலோ பிரிவில் ஜூலியன் ராபின் நேரடி தேர்வு பெற்றனர். மாணவிகளுக்கான 49கிலோ பிரிவில் லோகிதா முதலிடம், அனந்தலட்சுமி 2ம் இடம், 57 கிலோ பிரிவில் சௌபர்ணிகா முதலிடம், மீனலோசனி 3ம் இடம், 61 கி எடை பிரிவில் தனிஷ்தா 2ம் இடம், 69 கிலோ பிரிவில் செல்வ ஜெயஸ்ரீ 3ம் இடம், 77 கிலோ பிரிவில் வெரோனிகா 2ஆம் இடம், 86 கி பிரிவில் ராஜகுமாரி 3ம் இடம், 86+ கி பிரிவில் திலகபூமி 2ம் இடம், காருண்யா ஸ்ரீ 3ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.