தீக்கதிர் முக்கிய செய்திகள்
15 Dec 2025, 2:48 pm

தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

சென்னை: சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் அமையவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வா யன்று (டிச.16) காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டு கிறார். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர் களுக்காக சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் கடந்த மார்ச் மாதம் நாகையில் கலந்து கொண்ட அரசு விழாவில் அறிவித்தார். ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் ரூ.39.20 கோடி மதிப் பீட்டில் இந்த இல்லம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள், பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்ன தாக சென்னை வந்து தங்குவதற்கு வசதியாக விமான நிலையத்திற்கு அருகில் இந்த இல்லம் கட்டப்படுகிறது. நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்கு வதற்கு ஏற்ப இந்த கட்டடம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

பாமாயில், பருப்பு கொள்முதலுக்கு ஒப்பந்தம் கோரியது அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம்தோறும் ரேசன் கடைகளில் சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் (பாமா யில்) ஆகியவற்றை மிக குறைந்த விலையில் பெற்று வரு கின்றனர். ஏழை - எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய வற்றை மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான பருப்பு மற்றும் பாமாயில், தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-இன்படி நாளி தழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன. சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரி யுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமா யிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

‘அதிமுக தொண்டர்கள் உரிமைக் குழு’ கழகமாக மாற்றம்

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் டிச.23 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில், அதிமுக தொண்டர்கள் ‘உரிமை மீட்புக்குழு’ என்பதற்கு பதிலாக ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில், சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலா ளர்கள் கூட்டம் டிச.23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை பெற உள்ளது என்று தெரிவித்துள்ளார். கூட்டத்துக்கு, அர சியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரி வித்தனர்.

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

சென்னை: எதிர்வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு வழங்கும் நிகழ்வை அந்தக் கட்சி யின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் திங்களன்று தொடக்கி வைத்தார். தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை படிவங்களை பெற்று பூர்த்தி செய்து விருப்ப மனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித் துள்ளார். ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம். விருப்ப மனுவை பெற ரூ.15,000, புதுச் சேரிக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்

சென்னை, டிச.15 - 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை யொட்டி, பாஜக முக்கிய நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளைத் தொடங் கியுள்ளது. ஒன்றிய அமைச்ச ரும், கட்சியின் மூத்த தலை வருமான பியூஷ் கோயல் தமிழகத்தின் 2026 சட்ட மன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயலுடன் இணைந்து செயல்பட, மேலும் இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் இணைப் பொறுப்பாளர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகி யோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறி விப்பை, பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டு உள்ளார். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வழி காட்டுதலின்படி, 2026 சட்ட மன்றத் தேர்தலுக்காக இந்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

டிச.24-ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை

சென்னை: தமிழ்நாட் டில் மாநிலக் கல்வி வாரியத் தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரை யாண்டுத் தேர்வு கடந்த டிச.10 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 ஆம் தேதி வரை அரை யாண்டுத் தேர்வு நடை பெற உள்ளது. இந்நிலை யில், டிச.24 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப் பட உள்ளது. தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறி வித்துள்ளது.

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில் ஞான சேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஞானசேகரன் தாயார் கங்காதேவி தாக்கல் செய்த மனுவை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித் தது. ‘

ராயபுரத்தில்தான் போட்டி’ ஜெயக்குமார் உறுதி

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலு வலகத்தில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப் போது, “மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டி யிடவில்லை. எனக்கு எப்போதும் ராயபுரம்தான். வெற்றியோ தோல்வியோ நான் எங்கும் எந்த கட்சிக் கும் மாறவில்லை” என் றார்.

இளையராஜா பாடல்கள் வழக்கு முடித்து வைப்பு

சென்னை: ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொ டரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. படத்திலிருந்து பாடல்கள் நீக்கப்பட்டதாகவும், இனி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறு வனம் உறுதி அளித்த தால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.