தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நான்காம் கட்டப் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவங்குகிறார் முதல்வர்!

9 Apr 2026, 5:30 am
நான்காம் கட்டப் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவங்குகிறார் முதல்வர்!

நான்காம் கட்டப் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவங்குகிறார் முதல்வர்!

ஏப். 11 -இல் சின்னதுரைக்கு வாக்கு சேகரிப்பு சென்னை, ஏப். 8 - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

முன்னதாக முதலாம் கட்டமாக ஏப்ரல் 7 அன்று சீர்காழி மற்றும் கடலூர் மாவட்டத்திலும், ஏப்ரல் 8 அன்று திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

ஏப்ரல் 9 அன்று மாலை வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், பல்லாவரம், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து, நான்காம் கட்டமாக ஏப்ரல் 10 அன்று மாலை 5 மணிக்கு தஞ்சாவூரில் தனது பிரச்சாரத்தைத் துவங்குகிறார். திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

தொடர்ந்து ஏப்ரல் 11 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம். சின்னதுரை உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.