தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘டெட்’ தேர்வு கட்டாய உத்தரவை மாற்ற நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றச் செய்க!

10 Jul 2026, 8:51 pm
‘டெட்’ தேர்வு கட்டாய உத்தரவை மாற்ற  நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றச் செய்க!

‘டெட்’ தேர்வு கட்டாய உத்தரவை மாற்ற நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றச் செய்க!

முதலமைச்சருக்கு கோரிக்கை புதுக்கோட்டை, ஜூலை 10 - பணியிலுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி மாற்றுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

2028 காலக்கெடு: ஆசிரியர்கள் அதிர்ச்சி

இதுகுறித்து அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் மா. குமரேசன் புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில், “ஆசிரியர்கள் வரும் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கடும் அதிர்ச்சியளிக்கிறது. இதனை மாற்ற முதலமைச்சர் தனது ஆளுமையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும், கேள்வித்தாள் தயாரிப்பு மற்றும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை மாநில அரசே நிர்ண யம் செய்ய வேண்டும். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வி லும் இனசுழற்சி முறையைப் புகுத்தாமல், அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 55 ஆக நிர்ணயிக்க வேண்டும். இதில் 30 மதிப்பெண்களைத் தேர்வு மூலமும், 20 மதிப்பெண்களை அவர்களின் பணிக் காலத்தின் அடிப்படையிலும், 5 மதிப்பெண்களை உயர்கல்வித் தகுதிக்காகவும் வழங்கலாம். அதேபோல, தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் மாணவர்களிடம் உளவியல் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை ஏற்க முடியாது” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.