நான்காம் கட்டப் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவக்குகிறார் முதல்வர்!
9 Apr 2026, 5:30 am

நான்காம் கட்டப் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவக்குகிறார் முதல்வர்!

ஏப். 11 -இல் சின்னதுரைக்கு வாக்கு சேகரிப்பு

சென்னை, ஏப். 8 - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 7 அன்று சீர்காழி மற்றும் கடலூர்லும், ஏப்ரல் 8 அன்று திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்லும் நடந்த பொதுக் கூட்டங்களில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

அதைத் தொடர்ந்து, நான்காம் கட்டமாக ஏப்ரல் 10 அன்று மாலை 5 மணிக்கு தஞ்சாவூரில் தனது பிரச்சாரத்தைத் துவக்குகிறார். திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தொடர்ந்து ஏப்ரல் 11 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம். சின்னதுரை உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.