சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தமிழன் அன்சாரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
9 Apr 2026, 5:30 am

சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தமிழன் அன்சாரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சிதம்பரம், ஏப். 8- சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தமிழன் அன்சாரி சட்ட மன்றத்தில் ஆணித்தரமாக பேசி தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தியவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

கடலூரில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழன்அன்சாரியை பாராட்டினார்.

அப்போது அவர் நமது வெல்லும் வேட்பாளர் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிழன் அன்சாரி சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க கூடியவர். மேலும் விவாதங்களிலும் ஏற்கனவே சட்டமன்றத்திலும் ஆணித்தரமாக பேசி தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்.

தமிழன் அன்சாரிக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களுடைய பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும் என்று நான் அன்போடு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என புகழாரம் சூட்டினார். இந்த நிலையில் தமிழன் அன்சாரி சிதம்பரம் நகரப் பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.