சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தமிழன் அன்சாரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
9 Apr 2026, 5:30 am

சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தமிழன் அன்சாரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் தமிழன் அன்சாரி சட்ட மன்றத்தில் ஆணித்தரமாக பேசி தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

கடலூரில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தமிழன் அன்சாரியை பாராட்டினார்.

தமிழன் அன்சாரிக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களுடைய பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும் என்று நான் அன்போடு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என புகழாரம் சூட்டினார்.