முந்தய பக்கம்

கேரம் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!

15 Dec 2025, 11:19 am
கேரம் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!
<p>கேரம் உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.<br /> மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலக கோப்பையில், மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணிப் பிரிவுகள் என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று, சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.<br /> அதேபோல், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், இரட்டையர் பிரிவில் வெள்ளியையும், அணிப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்ற சென்னையை சேர்ந்த காசிமாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram