முந்தய பக்கம்

ஏப்.4 இல் முதலமைச்சர் நாகர்கோவிலில் பரப்புரை

2 Apr 2026, 5:30 am
ஏப்.4 இல் முதலமைச்சர் நாகர்கோவிலில் பரப்புரை

ஏப்.4 இல் முதலமைச்சர் நாகர்கோவிலில் பரப்புரை

தமிழக முதலமைச்சர் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 4ஆம் தேதி நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் ஆய்வு செய்தார்.

நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கன்னியாகுமரியில் மேயர் மகேஷ் நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தை திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமரி கடல்விஜய், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆஸ்டினுடன் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார். கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram