திருவாரூரில் தேர்தல் பரப்புரையை துவங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 Apr 2026, 5:30 am

திருவாரூரில் தேர்தல் பரப்புரையை துவங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை/திருவாரூர், மார்ச் 11- 2024 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை மார்ச் 11 அன்று மாலை திருவாரூரில் தொடங்கினார்.

திருவாரூர் முன்னால் முதல்வர் கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில், தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில், திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, க.மாரிமுத்து, தேர்தல் முகவர் முபாரக் ஆகியோருடன் உதயசூரியன், கதிர் அரிவாள் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, கே.என்.செல்வராஜ் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி, கரூரில் இன்று பரப்புரை திருவாரூர் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு திருச்சியில் தங்கிய முதலமைச்சர், மார்ச் 12 புதன்கிழமை காலை திருச்சி உழவர் சந்தை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேரு, திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் 9 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மாலை 5 மணிக்கு கரூர் ராமகிருஷ்ண அரங்கத்தில், கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.