முந்தய பக்கம்

நீதியை நிலைநாட்டுவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

14 Apr 2026, 12:48 pm
நீதியை நிலைநாட்டுவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்பேத்கரின் பிறந்தநாளில், நீதியை நிலைநாட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 136ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்! இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.

முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram