முதல்வர் சாலை வலம் தேர்தல் ஆணையத்திற்கு பொதுமக்கள் கேள்வி
2 Oct 2026, 9:10 pm

முதல்வர் சாலை வலம் தேர்தல் ஆணையத்திற்கு பொதுமக்கள் கேள்வி

சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி, முதலமைச்சர் விஜய் 45 கி.மீ. தொலைவுக்குச் சாலை வலம் மேற்கொண்டார்.தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கடந்த செப்.25 ஆம் தேதி பரப்புரை செய்த முதல்வர், தாராபுரம் தொகுதியிலும் வேட்பாளர் சத்தியபாமாவுக்காக வாக்குச் சேகரித்தார். கள நிலவரம் ஆளுங்கட்சிக்கு எதிராகவே இருந்து வருகிறது. குறிப்பாக, அதிமுகவில் வெற்றி பெற்றுராஜினாமா செய்து விட்டு ஆளுங் கட்சியில் இணைந்து மீண்டும் போட்டியிடுவதால் தொகுதி முழுவதும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மதுராந்தகத்தில் இது அவரது இரண்டாவது பரப்புரை. முதலில் பொதுக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மக்களை நேரடியாகச் சந்திக்கும் வகையில் மேடையின்றி சாலை வலமாக மாற்றப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியின் எல்லையான மாமண்டூரில் தொடங்கி படாளம், கருங்குழி,மதுராந்தகம் நகரம், பெரும்பாக்கம், மேல்மருவத்தூர் வழியாக அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம், சரவம்பாக்கம் வழியில் சுமார்39 முக்கிய சந்திப்புகளில் பிரச்சாரம் மேற்கொண்டு மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கத்தில் நிறைவு செய்தார்.

பொதுமக்கள் கேள்வி

முதல்வரின் சாலை வலத்திற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பல மணி நேரம் முடக்கப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மதியம் 1 மணி முதல் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், கடுமையான வெயிலில் பேருந்து பயணிகள், அவசர ஊர்திகள் மற்றும் பொதுமக்கள்கடும் அவதிக்குள்ளாகினர்.

“குறிப்பிட்ட பகுதியில் பொதுக்கூட்டமோ அல்லது நகரப் பகுதியில் பிரச்சாரமோ நடத்தலாம்; ஆனால், தேசிய நெடுஞ்சாலையை முற்றிலுமாக முடக்கி, ரோடு ஷோ என்ற பெயரில் பொதுமக்களை மணிக்கணக்கில் காக்க வைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தேர்தல் ஆணையத்திற்கும் காவல்துறைக்கும் எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.