தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு வீட்டு கட்டுமான நிதியுதவி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

6 Jul 2026, 11:23 pm
மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு  வீட்டு கட்டுமான நிதியுதவி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
<p><strong>மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு வீட்டு கட்டுமான நிதியுதவி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 6- புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு கட்டு மான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் நடைபெற்றது. திட்டத்தின் பின்னணி புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் &#39;காமராஜர் நூற்றாண்டு ஒருங்கி ணைந்த வீடு கட்டும் திட்டம்&#39; மற்றும் &#39;பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா&#39; ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ், மங்கலம் தொகுதியைச் சேர்ந்த 51 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதியுதவி வழங்கல் சட்டப்பேரவையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட 51 பயனாளிகளுக்கு முதற்கட்டமாகத் தலா ரூ.1,00,000 வீதம் கட்டுமான நிதியுதவியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.